ஹீரோக்களுக்கு இணையாக ஸ்டண்ட் காட்சிகளில் அதிரடி காட்டி மிரட்டிய நடிகைகள்
தமிழ் சினிமாவில் தொடக்க காலத்தில் நடிகைகள் குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களிலோ அல்லது காதல் காட்சிகளிலோ மட்டுமே அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தனர். ஆனால், காலப்போக்கில் அந்த பிம்பத்தை உடைத்தெறிந்து, கதாநாயகர்களுக்கு இணையான ஆக்ஷன் அவதாரமெடுத்து திரையரங்குகளை அதிரவைத்த தென்னிந்திய நடிகைகளின் பங்களிப்பு மற்றும் அவர்களின் அதிரடி ஆக்ஷன் படங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்.
தமிழ் மற்றும் தென்னிந்திய சினிமாவில் நடிகர்கள் மட்டுமே சண்டைக் காட்சிகளில் அசத்த முடியும் என்ற நிலையை மாற்றியமைத்த நடிகைகள் பட்டியல் இதோ...
விஜயசாந்தி: 'தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார்' என்று புகழப்பட்ட விஜயசாந்தி, ஆக்ஷன் நாயகியாக ஒரு புதிய சகாப்தத்தையே தொடங்கினார். 'வைஜயந்தி ஐ.பி.எஸ்' திரைப்படத்தில் டூப் போடாமல் அவரே சண்டைக் காட்சிகளில் இறங்கி நடித்தது, ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
நவீன கால அதிரடி நாயகிகள் :
இன்றைய நவீன தமிழ் சினிமாவில் வணிக ரீதியிலான மற்றும் த்ரில்லர் திரைப்படங்களில் ஆக்ஷன் அவதாரமெடுத்த முக்கிய நடிகைகள்:
அனுஷ்கா ஷெட்டி: வரலாற்றுச் சிறப்புமிக்க கதைகளில் கதாநாயகர்களுக்கு நிகராகச் சண்டையிடும் திறன் படைத்தவர், அனுஷ்கா ஷெட்டி. 'அருந்ததி', 'பாகுபலி' (தேவசேனா) மற்றும் 'ருத்ரமாதேவி' ஆகிய திரைப்படங்களில் வாள்வீச்சு, வில்வித்தை மற்றும் குதிரையேற்றம் எனப் பிரம்மாண்டமான போர்க்களக் காட்சிகளில் மிரட்டினார்.
நயன்தாரா: 'பில்லா' திரைப்படத்தில் துப்பாக்கிகளுடன் அதிரடி காட்டிய நயன்தாரா, தொடர்ந்து 'நெற்றிக்கண்', 'இமைக்கா நெட்டிகள்', 'ஐரா' மற்றும் பாலிவுட் அறிமுகமான 'ஜவான்' திரைப்படத்தில் சிறப்புப் படைப் பிரிவினராக வந்து துணிச்சலான ஆக்ஷன் காட்சிகளில் களமிறங்கி அசத்தினார்.
சமந்தா: 'தி பேமிலி மேன் 2' வெப் தொடரில் 'ராஜீ' என்ற கதாபாத்திரத்திற்காகக் கடுமையான தற்காப்புக் கலைப் பயிற்சிகளை மேற்கொண்டு, எந்தவிதப் பின்னடைவும் இன்றி ஆக்ஷன் காட்சிகளில் நடித்துப் பாராட்டுகளைப் பெற்றார். தொடர்ந்து 'யசோதா, மா இன்டி பங்காரம்' படத்திலும் இவரது அதிரடி காட்சிகள் கவனத்தைப் பெற்றன.
ஆண்ட்ரியா ஜெரமையா: 'விஸ்வரூபம்' திரைப்படத்தில் துப்பாக்கிச் சூடு மற்றும் ஸ்டண்ட் காட்சிகளிலும், 'அனல் மேலே பனித்துளி' படத்தில் எதார்த்தமான போராட்டக் காட்சிகளிலும் நடித்துத் தனது ஆக்ஷன் திறனை நிரூபித்தார்.
திரைத்துறையில் ஏற்பட்ட மாற்றம் :
முன்பெல்லாம் கதாநாயகனை மட்டுமே நம்பி உருவாக்கப்பட்ட ஆக்ஷன் கதைகள், தற்போது நடிகைகளை மையமாகக் கொண்டும் எழுதப்படுகின்றன. முறையான தற்காப்புக் கலைப் பயிற்சிகள், ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் சிறப்பு ஸ்டண்ட் பயிற்சிகளை மேற்கொண்டு, ஆபத்தான காட்சிகளிலும் சொந்தமாகவே நடித்துத் தமிழ் சினிமாவின் எல்லையை இந்த நடிகைகள் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.