உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நம் குடும்பத்தில் ஒருவருக்கு ஆனது போல் இருக்கிறது: தேவா மறைவு குறித்து வடிவேலு

நம் குடும்பத்தில் ஒருவருக்கு ஆனது போல் இருக்கிறது: தேவா மறைவு குறித்து வடிவேலு


இசையமைப்பாளர் தேவா மாரடைப்பு காரணமாக நேற்று (அக். 17) சென்னையில் காலமானார். அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தினர். தேவாவின் உடல் அவரது சொந்த ஊரான ஆற்காடு அருகே உள்ள சக்கரமல்லூரில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் நகைச்சுவை நடிகர் வடிவேலு வெளியிட்ட வீடியோவில், ‛‛இசையமைப்பாளர் தேவா அண்ணன் திடீரென மறைந்தது உண்மையிலேயே அதிர்ச்சியாக இருக்கிறது. மிக நல்ல மனிதர். என்னைப் பார்த்தால் வாங்க வடிவேலு தம்பி என அன்புடன் அழைத்துப் பேசுவார். மொத்த குடும்பத்திற்கும் ஒரே ஆளாக அனைவரையும் நன்றாகப் பார்த்துக்கொண்டார். அவர் இறந்ததும் அக்குடும்பத்தினர் அழுவதைக் கண்டால் நம் குடும்பத்தில் ஒருவருக்கு ஆனது போல் இருக்கிறது. தேவா அண்ணன் மறைந்தது என் மனதை மிகவும் தொந்தரவு செய்கிறது. அண்ணனின் குடும்பம் எப்போதும் தைரியமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும்.” எனத் தன் இரங்கலைப் பதிவு செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !