உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரபாஸ் நடிக்கும் 'ஸ்பிரிட்': 2027 தீபாவளி வெளியீடு

பிரபாஸ் நடிக்கும் 'ஸ்பிரிட்': 2027 தீபாவளி வெளியீடு


இந்தியத் திரையுலகத்தில் பான் இந்தியா நடிகராக உயர்ந்திருக்கும் பிரபாஸ் தொடர்ந்து பான் இந்தியா படங்களிலேயே நடித்து வருகிறார். படம் ஓடுகிறதா, வசூலாகிறதா என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அவரைத் தேடிப் போய் நடிக்க வைக்கிறார்கள்.

தெலுங்கில் 'அர்ஜூன் ரெட்டி', ஹிந்தியில் 'கபீர் சிங், அனிமல்' ஆகிய படங்களை இயக்கிய தெலுங்கு இயக்குனரான சந்தீப் ரெட்டி வங்கா தற்போது பிரபாஸ் நடிக்கும் 'ஸ்பிரிட்' படத்தை இயக்கி வருகிறார்.

இப்படம் 2027 தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 29ம் தேதியன்று வெளியாகும் என இன்று அறிவித்துள்ளனர். ஒரு வருடத்திற்கும் முன்பாகவே படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்து ஆச்சரியப்படுத்தி உள்ளார்கள்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா, 'இந்தியாவின் பெரிய சூப்பர் ஸ்டார்' என்றும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து ரசிகர்கள் புதிய சர்ச்சையை ஆரம்பித்து வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

PV
2026-10-19 01:07:58

First this style has to end. Shooting movie for a year and invariably these movies bomb at BO.