உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஓடிடிக்கு வரும் கார்த்திக் சுப்பராஜின் ‛டோரதி'

ஓடிடிக்கு வரும் கார்த்திக் சுப்பராஜின் ‛டோரதி'


கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 25ம் தேதி திரைக்கு வந்த படம் ‛டோரதி'. கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் நடித்துள்ள இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். 1990களின் மதுரை பின்னணியில், சாதி வெறி, ஆணாதிக்கம் மற்றும் வன்முறை நிறைந்த சூழலில் வளரும் இரண்டு நெருங்கிய நண்பர்களின் கதையில் இப்படம் உருவாகியுள்ளது.

இந்நிலையில், டோரதி படம் வருகிற அக்டோபர் 23ம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாவதாக அறிவித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தாத இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. என்றாலும் ஓடிடி பார்வையாளர்கள் இப்படத்தை எவ்வாறு வரவேற்பார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !