விஜய் சேதுபதி - பூரி ஜெகன்னாத்தின் ‛ஸ்லம்டாக்' படப்பிடிப்பு நிறைவடைந்தது!
‛பத்தா' படத்திற்கு பிறகு ‛அரசன், இஞ்சி வெல்லம், ஸ்லம்டாக் 33 டெம்பிள் ரோடு, பாக்கெட் நாவல்' போன்ற படங்களில் நடித்து வருகிறார் விஜய்சேதுபதி. இதில், பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் அவர் நடித்து வந்த ‛ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு' படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பு நேற்று ஹைதராபாத்தில் நிறைவடைந்தது. இந்த படத்தை பூரி கனெக்ட்ஸ் பேனரின் கீழ் பூரி ஜெகன்னாத் மற்றும் நடிகை சார்மி கவுர் தயாரித்துள்ளனர்.
இப்படம் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் பூரி ஜெகன்னாத் உருவாக்கி வருகிறார். இதுவரை வெளியிடப்பட்ட கதாபாத்திர அறிமுக வீடியோக்கள் படத்தின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தியுள்ளன. படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், விளம்பரப் பணிகளைத் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இப்படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. சம்யுக்தா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் தபு, துனியா விஜய், ஜரீனா வஹாப், பிரம்மாஜி, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையமைக்கும் இந்த ஸ்லம் டாக் படம் பான்-இந்தியா படமாக வெளியாகவுள்ளது.