உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அர்ஜூன் தாஸ் நடிக்கும் ‛ஜான் டோ'

அர்ஜூன் தாஸ் நடிக்கும் ‛ஜான் டோ'

அர்ஜூன் தாஸ் நடிப்பில் சமீபத்தில் ஒன்ஸ்மோர் என்ற படம் தியேட்டரிலும், லவ் என்ற வெப்தொடர் ஓடிடியிலும் வெளியானது. இவர் அடுத்தப்படியாக இரண்டு, மூன்று படங்களில் நடிக்கிறார். அதில் ஒரு படத்திற்கு ‛ஜான் டோ' என பெயரிட்டுள்ளனர். இதை மதுமிதா இயக்குகிறார். சஞ்சனா நடராஜன், சிருஷ்டி டாங்கே ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.

விறுவிறுப்பான கிரைம் திரில்லர் படமாக உருவாகிறது என்பதை படத்தின் போஸ்டரை பார்க்கையிலே புரிகிறது. பாகுபலி படத்தை தயாரித்த ஆர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தமிழில் நேரடியாக தயாரிக்கும் முதல்படம் இதுவாகும். ‛‛இந்த தலைப்பு ஒரு கேள்விக்குப் பதிலளிப்பது போல் இருக்கும், அதே சமயம் பல கேள்விகளை எழுப்பும்'' என்கின்றனர் படக்குழுவினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !