விஜய்யின் திருப்பாச்சி டிசம்பர் 25-ல் ரீ-ரிலீஸ்
கடந்த 2005ம் ஆண்டில் பொங்கல் தினத்தில் முதல்வர் விஜய் நடித்து திரைக்கு வந்த படம் திருப்பாச்சி. பேரரசு இயக்கிய இப்படத்தில் விஜய்யுடன் திரிஷா, பசுபதி, மல்லிகா, லிவிங்ஸ்டன், கோட்டா சீனிவாச ராவ், பெஞ்சமின் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்த இந்த படத்திற்கு தினா இசையமைத்தார். ஆர்.பி.சவுத்ரியன் சூப்பர் குட் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்தது. இப்படம் கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி ரீ -ரிலீஸ் ஆக இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் பின்னர் அந்த தேதியை ஒத்திவைத்து விட்டார்கள்.
இந்த நிலையில் தற்போது திருப்பாச்சி படம் வருகிற டிசம்பர் 25ம் தேதி ரீ ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவித்துள்ளார்கள். ஏற்கனவே விஜய் நடித்து சூப்பர் ஹிட் ஆன பல படங்கள் மீண்டும் வெளியிடப்பட்டு பெரிய அளவில் வசூலித்து வரும் நிலையில் இந்த திருப்பாச்சி படமும் அந்த பட்டியலில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.