வித்யாபாலன் பதிவு : குட் மார்னிங் கமெண்ட்டுகளை அள்ளித் தெளிக்கும் ரசிகர்கள்
ரஜினிகாந்த் நடித்து கடந்த வாரம் வெளியான திரைப்படம் 'ஜெயிலர் 2'. இப்படம் ரசிகர்களின் வரவேற்புடன் 500 கோடி வசூலைக் கடந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் வில்லி காந்தா கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகை வித்யா பாலன் நடித்திருக்கிறார். அவருக்கும் ரஜினிகாந்த்திற்கும் இடையிலான உரையாடல் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதிலும் குறிப்பாக ரஜினிகாந்த் தொலைபேசியில் வித்யாபாலனுடன் பேசும் வசனமான, “நான் குட் மார்னிங் மெசேஜ் அனுப்பினேன், ரிப்ளை வரல…. நான் குட் ஈவினிங் மெசேஜ் அனுப்பினேன், ரிப்ளை இல்லை…,” ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
இன்றைய வாட்சப் யுகத்தில், இப்படி 'குட் மார்னிங், குட் ஈவினிங்,' அனுப்புபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதை அப்படியே படத்தில் வைத்திருக்கிறார் இயக்குனர் நெல்சன்.
இன்ஸ்டா தளத்தில் அடிக்கடி சுவாரசியமான பதிவுகளைப் பதிவிடும் வித்யா பாலன் நேற்று ஒரு வீடியோவைப் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவிற்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கமெண்ட்டுகள் இடம் பெற்றுள்ளது. அதில் பெரும்பாலும், 'குட் மார்னிங், குட் ஈவினிங்' கமெண்ட்டுகள் தான் உள்ளன.
'ஜெயிலர் 2' படத்தின் அந்த 'குட் மார்னிங்' சீன் எபெக்ட் காரணமாக வித்யாபாலனின் பதிவில் இப்படியான கமெண்ட்டுளை ரசிகர்கள் அள்ளித் தெளித்திருக்கிறார்கள்.
மூர்த்தி அண்ணனின் 'செஸ்' வசனத்திற்குப் பிறகு, காந்தாவிற்கு ரஜினி சொல்லும் இந்த 'குட் மார்னிங், குட் ஈவினிங்' டிரென்டிங்கில் உள்ளது.