உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சென்னையில் மேலும் 'பிரம்மாண்டத் திரை வடிவ' தியேட்டர்கள்

சென்னையில் மேலும் 'பிரம்மாண்டத் திரை வடிவ' தியேட்டர்கள்

மவுனப் படங்கள், பேசும் படங்கள், கருப்பு வெள்ளை, ஈஸ்ட்மென் கலர், கலர், சினிமாஸ்கோப், 70 எம்எம், ஐமேக்ஸ், டால்பி விஷன், 4டிஎக்ஸ், பிஎக்ஸ்எல், எபிக், இன்னும் பிற என நிறைய திரை வடிவங்களில் மாறிக் கொண்டே வருகிறது.

பிரம்மாண்ட திரை என்பதில் ஐமேக்ஸ் தியேட்டர்கள் ரசிகர்களின் வரவேற்பை அதிகம் பெற்றவையாக உள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரையில் சென்னையில் வடபழனியில் உள்ள பிவிஆர் பலாசோ மல்டிபிளக்ஸ் வளாகத்தில் ஒரு ஐமேக்ஸ் தியேட்டர் செயல்பட்டு வருகிறது.

வேளச்சேரியில் பீனிக்ஸ் மாலில் ஒரு ஐமேக்ஸ் தியேட்டர் செயல்பட ஆரம்பித்து சமீபத்தில் புதுப்பித்தல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டது. அதை இன்று மீண்டும் திறப்பதாக இருந்தார்கள். ஆனால், சில காரணங்களால் இன்னும் முன்பதிவு ஆரம்பமாகவில்லை.

சென்னையில் இரண்டு இடங்களைத் தவிர கோயம்பத்தூரில் பிராட்வே சினிமாஸ் மல்டிபிளக்ஸ் வளாகத்தில் ஒரு ஐமேக்ஸ் தியேட்டர் உள்ளது. ஆக, தமிழகத்தில் மொத்தம் 3 ஐமேக்ஸ் தியேட்டர்களே உள்ளன.

சென்னையில் விரைவில் இன்னும் மூன்று ஐமேக்ஸ் தியேட்டர்கள் வர உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. பெரம்பூர், பெருங்குடி, ஈசிஆர் ஆகிய இடங்களில் திறக்கப்பட உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர் வளாகங்களில் இவை வர உள்ளதாகச் சொல்கிறார்கள்.

பிஎக்ஸ்எல் என்பதும் பிரம்மாண்ட திரை கொண்ட தியேட்டர்கள். சென்னை அண்ணா நகரில் உள்ள விஆர் மால் வளாகத்தில் ஒரு பிஎக்ஸ்எல், கோயம்பத்தூர் ப்ரூக்பீல்ட்ஸ் மாலில் உள்ள பிஎக்ஸ்எல் என இரண்டு தியேட்டர்கள் தமிழகத்தில் உள்ளன. அடுத்து சென்னை வேளச்சேரியில் திறக்கப்பட உள்ள எக்ஸ்பி மாலில் ஒரு பிஎக்ஸ்எஸ் தியேட்டர் வர உள்ளது.

இவை போன்றே மற்றுமொரு அகன்ற பிரம்மாண்ட திரை வடிவம் எபிக். தமிழகத்தில் கோயம்பத்தூர், மதுரை, தஞ்சாவூர், தென்காசி, சென்னை ஓஎம்ஆர் ஆகிய இடங்களில் உள்ள சில தியேட்டர்களில் செயல்பாட்டில் உள்ளன. விரைவில் சென்னை மற்றும் இதர சில நகரங்களில் இந்த எபிக் தியேட்டர்கள் புதிதாக வர உள்ளன.

வீட்டில் அதிகபட்சமாக 21 இன்ச் டிவியில் படங்கள், சீரியல்களைப் பார்த்து வந்தவர்களே இப்போது 100 இன்ச் வரையிலான டிவியை வாங்க ஆரம்பித்துவிட்டார்கள். வீட்டில் வைத்து பார்க்கும் வசதி கொண்ட புரொஜக்டர்களை இன்றைய தலைமுறையினர் வாங்கிப் படம் பார்க்கிறார்கள்.

வீட்டிலேயே இப்படியான மாற்றம் என்றால் தியேட்டர்களில் பிரம்மாண்டத் திரை வடிவம் என்பது சினிமா ரசிகர்களுக்கு அவசியமாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !