இந்த தருணத்திற்காக காத்திருந்தேன் : ஜீவா நெகிழ்ச்சி
'டோரதி' படத்திற்கு பிறகு கவனிக்கப்படும் நடிகை ஆகியிருக்கிறார் ஜீவா. திருநங்கையான இவர் இதுவரை சுமார் 45 திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களில் நடித்துள்ளார். ஆக்கம், தாரை தப்பட்டை, தர்மதுரை, தர்பார் உள்ளிட்ட படங்களிலும், சுழல், கையும் களவும் உள்ளிட்ட இணையத் தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது,'டோரதி' படத்தில் அவரது கதாபாத்திரம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஜீவாவிற்கு தற்போது நிறைய வாய்ப்புகள் வருகின்றன. விரைவில் தெலுங்கு படம் ஒன்றிலும் நடிக்க இருக்கிறார். சினிமா வாய்ப்புக்காக தனியாக போட்டோ ஷூட்டும் நடத்தி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது “ எனது நடிப்பை அங்கீகரித்து மக்கள் கொண்டாடுவதை முதல்முறையாக உணர்கிறேன். இத்தனை ஆண்டுகளாக இந்தத் தருணத்துக்காகக் காத்திருந்தேன். என் தம்பி கார்த்திக் சுப்புராஜ் மூலமாக அது இப்போது நடந்திருக்கிறது. என்னை 'ஜீவா அக்கா' என்று அன்போடு அழைக்கிறார்கள். அந்த அன்பும் ரசிகர்களின் ஆதரவும் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த மகிழ்ச்சி, இன்னும் பத்து ஆண்டுகள் நான் தொடர்ந்து பயணிப்பதற்கான எனர்ஜி கொடுத்துள்ளது. நான் மதிக்கும் நபர்களிடமிருந்து கிடைத்த இந்த அங்கீகாரமும் அன்பும், தனது வாழ்க்கையின் இந்தக் காலகட்டத்தை மிகவும் பொக்கிஷமானதாக மாற்றியுள்ளது” என்கிறார் ஜீவா.