உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / புத்தம் புது நிகழ்ச்சிகள், படங்களுடன் சோனி விழா ஒளிபரப்பை தொடங்கியது

புத்தம் புது நிகழ்ச்சிகள், படங்களுடன் சோனி விழா ஒளிபரப்பை தொடங்கியது

தமிழ் தொலைக்காட்சி உலகின் புதிய வரவாக முன்னணி ஒளிபரப்பு நிறுவனமான சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா, தமிழில் 'சோனி விழா' என்ற புதிய பொழுதுபோக்கு சேனலை கொண்டு வந்துள்ளது. கடந்த 19ம் தேதி முதல் இதன் ஒளிபரப்பும் தொடங்கி உள்ளது.

இதன் முதல் கட்டமாகவே இந்திய திரையுலகின் இரு பெரும் ஆளுமைகளான இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் முன்னணி நடிகை சமந்தா ஆகியோரை களத்தில் இறக்கி, உள்ளது.

சோனி நிறுவனத்தின் உலகப்புகழ் பெற்ற இசை நிகழ்ச்சியான 'இந்தியன் ஐடல்' நிகழ்ச்சியின் தமிழ் பதிப்பாக 'தமிழ் ஐடல்' உருவாகிறது. ஏ.ஆர்.ரஹ்மான், தனது இசைப் பயண வரலாற்றில் முதல்முறையாக ஒரு தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் நடுவராகக் களமிறங்குகிறார்.

இதனுடன் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சமையல் கலை நிகழ்ச்சியான 'மாஸ்டர் செப்' நிகழ்ச்சியை நடிகை சமந்தா தொகுத்து வழங்குகிறார். 'சோனி விழா' சேனலில் ஒளிபரப்பாகும் அதே நிகழ்ச்சிகள், 'சோனி லிவ்' ஓடிடி தளத்திலும் ஒளிபரப்பாகும்.

90-களின் காதல் நினைவுகளை மீட்டெடுக்கும் 'நோட்புக் 90க்ஸ் காதல் ப்ளாஷ்பேக், உண்மையான குற்றச் சம்பவங்களின் பின்னணியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் 'கிரைம் பேட்ரோல் - குற்றங்கள் தரும் எச்சரிக்கை', பெண் காவலர்களின் துணிச்சலையும் அர்ப்பணிப்பையும் எடுத்துரைக்கும் 'மேடம் போலீஸ் : நாங்க இருக்க பயமேன்' ஆகிய நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகிறது.

அன்பில் அவன், அசரீரி, சர்தார் 2, மண்டாடி, மீசைய முறுக்கு 2 உள்ளிட்ட பல திரைப்படங்களும் அடுத்தடுத்து ஒளிபரப்பாக இருக்கிறது. இதுதவிர இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான அடுத்ததாக நடைபெறவுள்ள இருதரப்பு டி20 சர்வதேசத் தொடரின் ஐந்து போட்டிகளுக்கும் ஒளிபரப்பாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !