உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திடீர் தொகுப்பாளரான ரம்யா கிருஷ்ணன்

திடீர் தொகுப்பாளரான ரம்யா கிருஷ்ணன்

விஜய் டிவியின் நட்சத்திர நிகழ்ச்சியான பிக்பாஸை ஆரம்பத்தில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அவர் சினிமா, அரசியல் ஆகியவற்றில் பிசியாகி விட்டதால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அவருக்கு பிறகு கடந்த 3 சீசன்களை விஜய்சேதுபதி தொகுத்து வழங்கினார். தற்போது 10வது சீசன் நிகழ்ச்சியையும் அவரே தொகுத்து வழங்கி வந்தார்.

இந்த நிலையில் அவருக்கு தொண்டை பிரச்சினை இருப்பதாக கூறி பிரேக் எடுத்துள்ளார். தற்போது விஜய்சேதுபதிக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். ரம்யா கிருஷ்ணனுக்கு பிக்பாஸ் தொகுத்து வழங்குவது புதிதல்லை. இதேபோன்று 5வது சீசனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கும்போது அருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !