நமோ நாராயணனுக்கு சிபாரிசு செய்த ரஜினி
ஜெயிலர் 2 படத்தின் மூலம் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்ததைத் தொடர்ந்து, தற்போது தனது அடுத்த படமான தர்மன் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அஸ்வத் மாரி முத்து இயக்கி வரும் இப்படத்தில் ரஜினியுடன் சிம்ரன், நயன்தாரா, ராசிகண்ணா, யோகிபாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது.
இப்படத்தில் மருத்துவராக மாறுபட்ட பரிமாணத்தை வெளிப்படுத்தும் வேடத்தில் நடிக்கிறார் ரஜினி. மேலும் இப்படத்துக்கான காமெடி காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறார்கள். இந்த படத்தில் ஏற்கனவே யோகி பாபு இருக்கும் நிலையில் தற்போது ஜெயிலர் 2வில் பழக்கடை மூர்த்தி என்கிற காமெடி வேடத்தில் நடித்த நமோ நாராயணனையும் இப்படத்தில் ரோலில் நடிக்க வைக்குமாறு இயக்குனரை கேட்டுக் கொண்டுள்ளாராம் ரஜினி. அதையடுத்து தர்மன் படக்குழு தற்போது அவரை ஒப்பந்தம் செய்து ஸ்பாட்டுக்கு அழைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடக்கிறது.