'ஜெயிலர் 2'ல் மோகன்லால் காட்சிகள் குறைக்கப்பட்டதில் வருத்தம் தான்: தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர்
சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர் 2' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் பாகத்தில் ரஜினிகாந்துக்கு பக்கபலமாக நிற்கும் மோகன்லால், சிவராஜ்குமார் மற்றும் ஜாக்கி ஷெராப் ஆகிய நட்சத்திரங்களும் இதில் நடித்திருந்தனர். ஆனால் சிவராஜ்குமாருக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் போல மோகன்லாலுக்கு கொடுக்கப்படவில்லை என்றும், படத்தில் அவர் வருவது வெறும் இரண்டு நிமிடக் காட்சிகள் கூட இல்லை என்றும் மலையாள ரசிகர்கள் தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் மோகன்லாலின் ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனத்தை கவனித்து வரும் தயாரிப்பாளரும் அவரது ஆஸ்தான நண்பருமான ஆண்டனி பெரும்பாவூரும் சமீபத்தில் இதே வருத்தத்தை வெளிப்படுத்தினார். இது குறித்து அவர் கூறும்போது, திரைப்படத்தின் டிரைலரில் இடம்பெற்றிருந்த மோகன்லாலின் பல காட்சிகள் கூட இறுதிப்படத்தில் இல்லை என்றபோது மிகவும் ஏமாற்றமும் அதிர்ச்சியும் ஏற்பட்டதாக அவர் கூறினார்.
மேலும் மோகன்லாலின் காட்சிகள் திரைப்படத்தின் இறுதிப் பகுதியில் பெரிய அளவில் எடிட் செய்து நீக்கப்படும் என்பது குறித்து மோகன்லாலுக்கோ அல்லது அவரது குழுவினருக்கோ எந்தவித முன்னறிவிப்பும் கொடுக்கப்படவில்லை என்பதையும் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் மறைமுகமாக உறுதிப்படுத்தினார்.