'டியூட்' இயக்குநரின் புதிய படத்திற்காக 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் சிம்பு - நயன்தாரா?
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான 'டியூட்' படத்தை இயக்கியவர் கீர்த்தீஸ்வரன். இவர் அடுத்ததாக இயக்க உள்ள புதிய படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்கிறார் என்று ஏற்கனவே சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க வைக்க நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. நயன்தாரா ஆரம்பக் காலத்தில் சிம்புவுடன் நெருக்கமான நட்பில் இருந்தார். அந்தச் சமயத்தில் 'வல்லவன்' படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். அதன்பிறகு அவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்தனர்,
இருந்தாலும் 2016ல் இயக்குநர் பாண்டிராஜ் 'இது நம்ம ஆளு' படத்தில் இவர்கள் இருவரையும் மீண்டும் இணைத்து நடிக்க வைத்தார். இந்த நிலையில் தற்போது பத்து வருடங்கள் கழித்து மீண்டும் இவர்கள் ஒரு புதிய படத்திற்காகச் சேர்கிறார்கள் என்றால் அது ஆச்சரியமான விஷயம் தான். இந்தப் படத்தில் இவர்கள் இருவருமே காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனத் தெரிகிறது.