33 ஆண்டுக்கு மீண்டும் திரைக்கு வரும் 'ஜென்டில்மேன்' : டிச., 11ல் ரிலீஸ்
இந்திய சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என பெயரெடுத்த ஷங்கர், 1993ல் இயக்குனராக அறிமுகமான முதல் படம் 'ஜென்டில்மேன்'. அர்ஜுன், மதுபாலா நாயகன், நாயகியாக நடிக்க முக்கிய வேடங்களில் வினீத், சுபஸ்ரீ, நம்பியார், சரண் ராஜ், அஜய் ரத்னம், கவுண்டமணி, செந்தில், ராஜன் பி தேவ் உள்ளிட்டோர் நடித்தனர். நட்புக்காக பிரபுதேவா - கவுதமி நடித்த சிக்கு புக்கு ரயிலே பாடல் பல தல முறைகளை கடந்து இன்றும் பிரபலமாக உள்ளது. பால குமரன் வசனங்களை எழுதி இருந்தார். கேடி குஞ்சுமோன் தயாரித்து இருந்தார்.
ஏ.ஆர்.ரகுமானின் இசையில் காலத்தால் அழியாத பாடல்கள், ஷங்கரின் தனித்துவமான இயக்க பாணி, மற்றும் அர்ஜுனின் சிறந்த நடிப்பு ஆகியவற்றால் படம் வெற்றி பெற்றது. இந்த பிரம்மாண்ட படத்தை ரீ ரீலிஸ் செய்கிறார்கள். 4கே அல்ட்ரா ஹெச்டி (4K Ultra HD) காட்சித்தரம் மற்றும் மேம்படுத்தப்பட் 7.1 சரவுண்ட் சவுண்ட் (7.1 suround sound) என நவீன தொழில்நுட்பத்துடன் டிசம்பர் 11- ம் தேதி உலகம் முழுவதும் மீண்டும் திரைக்கு வருகிறது. கிரேஸ் பிலிம் மீடியா (Grace Film Media) பேனரின் அனில் குமார் இப்படத்தை விநியோகம் செய்கிறார்.