உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரபாஸ் படம் குறித்து பரவிய வதந்தி!

பிரபாஸ் படம் குறித்து பரவிய வதந்தி!


பிரபாஸ் - இயக்குநர் கருணாகரன் கூட்டணி மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாகவும், அந்த படம் காதல் கதையில் உருவாகப்போவதாகவும் சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது. பிரபாஸின் ஹிட் படமான 'டார்லிங்' படத்தின் தொடர்ச்சியாக ஒரு புதிய கதையை எழுதும் பணி தற்போது நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், இந்த செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்றும், அதுபோன்ற எந்தவொரு திட்டமும் தற்போது நடைபெறவில்லை என்றும் பிரபாஸ் தரப்பு ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், தற்போது பிரபாஸ் 'ஸ்பிரிட், கல்கி-2' மற்றும் 'பெளசி' போன்ற படங்களில் மிகவும் பிஸியாக உள்ளார். சுவாரஸ்யமாக, இந்த படங்களைத் தாண்டி அவர் வேறு எந்த புதிய படத்திலும் இதுவரை கையெழுத்திடவில்லை என்று தெரிவித்துள்ளார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !