‛ராக்கா' துபாய் படப்பிடிப்பு : ஐதராபாத்திற்கு மாற்றம்
இயக்குநர் அட்லி - நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகி வரும் ராக்கா படத்தின் படப்பிடிப்பு, மும்பையில் அமைக்கப்பட்ட சிறப்பு அரங்குகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்திற்கு மாற்றப்பட உள்ளது. ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் ஒரு பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சி படமாக்கப்பட உள்ளது. இதுவரை பெரும்பாலான படப்பிடிப்பு மும்பையிலேயே நடந்து முடிந்த நிலையில், இப்படத்தின் படக்குழு ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
இந்த படத்தின் சில முக்கிய காட்சிகளை துபாயில் படமாக்க விரும்பினார் அட்லி. ஆனால், மத்திய கிழக்கில் நிலவும் நிச்சயமற்ற தன்மை மற்றும் போர்ப் பதற்றம் காரணமாக அவர் அந்த திட்டத்தை கைவிட்டுள்ளதாகத் தெரிகிறது. அதற்குப் பதிலாக அதே காட்சிகளை ஐதராபாத்திலேயே படமாக்க அவர் திட்டமிட்டு வருகிறார். ராக்கா படத்தில் அல்லு அர்ஜுன் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.