உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ராமாயணா படம் முன்பதிவிற்கு வரவேற்பு

ராமாயணா படம் முன்பதிவிற்கு வரவேற்பு

ராமாயணா படத்தின் முதல்பாகம் உலகளவில் திரையரங்குகளில் வெளியாக இன்னும் இரு நாட்களே உள்ளன. நிதேஷ் திவாரி இயக்கி உள்ள இந்த இதிகாசப் படத்தில் ரன்பீர் கபூர், யஷ் , சாய் பல்லவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் முன்பதிவு விற்பனையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. ஒரே நாளில் சுமார் 36,000 டிக்கெட்டுகள் கூடுதலாக விற்பனையாகியுள்ளன. இதற்கு முன்பு ஒரு நாளில் அதிகபட்சமாக 50,000 டிக்கெட்டுகள் வரை விற்பனையான நிலையில், நேற்றைய தினம் அந்த எண்ணிக்கை 86,000-ஐ எட்டியுள்ளது. படத்தை பற்றிய நேர்மறையான எதிர்பார்ப்புகளால் முன்பதிவு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த சிறப்பு திரையிடலுக்கு கிடைத்த நல்ல வரவேற்பும் படத்தின் முன்பதிவு விற்பனையை உயர்த்தியுள்ளது. இதே நிலை தொடர்ந்தால், டிக்கெட் விற்பனை விரைவில் ஒரு லட்சம் என்ற இலக்கைக் கடந்து விடும். இதற்கிடையில், படத்தின் திரையிடல் வடிவங்கள் பற்றிய செய்திகள் சில ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளன. ஐமேக்ஸ் திரையிடல்கள் மட்டுமே ப்ளாட் வடிவத்தில் கிடைக்கும் என்றும், மற்ற திரையரங்குகளில் ஸ்கோப் வடிவம் மட்டுமே கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

இப்படத்தில் சன்னி தியோல், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ரவி துபே, அருண் கோவில் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற நவம்பர் 5 அன்று பல மொழிகளில் திரைக்கு வரவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !