ரஜினியின் 'ஜெயிலர் 2' அதிரடிக்கு நடுவே முதலீட்டை மீட்டெடுத்த 'ரணபாலி'!
ரஜினியின் 'ஜெயிலர் 2' படம் இதுவரை உலக அளவில் 790 கோடி வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, இப்படம் தெலுங்கில் இதுவரை சுமார் 95 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. விரைவில், 100 கோடி ரூபாய் என்ற வசூல் சாதனையைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் ஜெயிலர்-2 படத்துடன் வெளியான நேரடி தெலுங்கு படமான விஜய் தேவரகொண்டாவின் 'ரணபாலி' ஆரம்பத்தில் இருந்தே வசூல் ரீதியாக தடுமாறிப்போனது. இருப்பினும் கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் தெலுங்கு மாநிலங்களில் சுமார் 68 கோடி ரூபாயும், உலகம் முழுவதும் 79 கோடி ரூபாயும் மொத்த வசூல் செய்திருப்பதாக படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக, ராயல்சீமா பகுதியில் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு, தெலுங்கு மாநிலங்களில் போட்ட முதலீட்டை மீட்டெடுத்துள்ளது. இருப்பினும், ரணபாலி படம் வெளிநாட்டுச் சந்தையில் படம் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது.