'ராமாயணா' 2ம் பாகம் 2028ல்தான் வெளியாகும்: தயாரிப்பாளர் தகவல்
பான் இந்தியா படமாக வெளியாகி உள்ள 'ராமாயணா' முதல் நாளிலேயே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ராமாயணா கதையை ஏற்றுக் கொள்ளாதவர்கள்கூட இந்த படத்தை பார்க்க ஆர்வம் காட்டுவது சினிமா வட்டாரத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஹாலிவுட்டுக்கு நிகரான கிராபிக்ஸ் காட்சிகளும், எல்லோருக்கும் தெரிந்த கதை மிரட்டிக் கொண்டிருக்கிறது.
பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதால் இதன் இரண்டாம் பாகத்தை இன்னும் கூடுதல் அக்கறையுடன் உருவாக்க தயாரிப்பு குழு முடிவு செய்துள்ளது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகள் இதுவரை எந்த சினிமாவிலும் வந்திராத அளவிற்கு உருவாக்க இருக்கிறார்கள். இதனால் ஏற்கெனவே 2ம் பாகம் 2027ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 2028ல்தான் வெளியாகும் என்று தெரிகிறது. ஏற்கெனவே ராமாயணா, 3 பாகமாக தயாரிக்கத்தான் திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர்தான் 2 பாகமாக குறைக்கப்பட்டது. தற்போது முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக 3 பாகமாக மாற்றலாமா என்றும் தயாரிப்பு தரப்பு யோசித்து வருகிறது.
இதுகுறித்து தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா கூறும்போது “முதல் பாகத்திற்கு உலகம் முழுவதும் கிடைத்துள்ள மிகப்பெரிய எதிர்பார்ப்பைக் கண்டு, படத்தின் இறுதிப் பகுதியை இன்னும் பிரமாண்டமாக உருவாக்கக் கூடுதல் நேரம் தேவை என முடிவு செய்துள்ளோம். இது போன்ற பிரமாண்டமான ஒரு படைப்பிற்கு முழுமையான நியாயம் செய்யவே இந்த ஓராண்டு கூடுதல் கால அவகாசம்.
அவசர அவசரமாக எதையும் செய்து முடிக்க நாங்கள் விரும்பவில்லை. தொடக்கத்தில் இப்படத்தை 3 பாகங்களாக உருவாக்கவே திட்டமிட்டிருந்தோம். ஆனால், அதற்குப் பிறகு 2 பாகங்களாக வெளியிடத் திட்டமிட்டோம் எனக் கூறியிருக்கிறார்.