வாசகர்கள் கருத்துகள் (1)
எழதி தரேன் இது பழைய the bridge on the river kwai என்ற ஆங்கில படத்தின் தழுவல்..
குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படமான 'யாத்திசை' படத்தின் மூலம் கவனிக்கப்பட்ட தரணி ராசேந்திரன் தற்போது இயக்கி வரும் படத்தில் சமுத்திரகனி, சசிகுமார் இணைந்து நடித்துள்ளனர். படத்திற்கு 'டெத் ரயில்வே' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த டைட்டிலை வெளியிட்டுள்ள சசிகுமார், 'குறைவான பட்ஜெட்டில் சரியான பார்வை மற்றும் திட்டமிடலும் இருந்தால் என்ன சாதிக்க முடியும் என்பதைக் காட்டிய 'யாத்திசை' திரைப்படக் குழு, இரண்டாம் உலகப் போர் காலத்தில் நடக்கும் கதையின் பின்னணியில் 'டெத் ரயில்வே'யுடன் மீண்டும் வந்துள்ளனர். இந்தப் படம் அவர்களுக்கு தகுதியான அங்கீகாரத்தை பெற்று தரும் என நம்புகிறேன். ஒட்டுமொத்த படக்குழுவினருக்கு என் வாழ்த்துகள்' என்று தெரிவித்துள்ளார்.
ஜே.கே.பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் சசிகுமார், சமுத்திரகனியுடன் பவானி, கிஷோர், அசோக் செல்வன் உள்ளிடோர் நடித்துள்ளனர். சேது முருகவேல் ஒளிப்பதிவு செய்ய, சார்தக் கல்யாணி இசையமைத்துள்ளார்.
இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் இந்தியாவுக்குள் நுழைவதற்காக பர்மா - தாய்லாந்து இடையே ரயில் பாதை அமைத்தது. இந்தப் பின்னணியில் 'டெத் ரயில்வே' படம் உருவாகி உள்ளது. ஏஐ தொழில்நுட்ப காட்சிகளுடன் படம் உருவாகி வருகிறது.
எழதி தரேன் இது பழைய the bridge on the river kwai என்ற ஆங்கில படத்தின் தழுவல்..