உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழில் இயக்குனராக அறிமுகமாகும் விஜய் தேவரகொண்டா பட இயக்குனர்

தமிழில் இயக்குனராக அறிமுகமாகும் விஜய் தேவரகொண்டா பட இயக்குனர்

விஜய், தனுஷ், சூர்யா என முன்னணி நட்சத்திரங்களை இயக்குவதன் மூலம் பிரபல தெலுங்கு இயக்குனர்கள் சிலர் அவ்வப்போது தமிழ் சினிமாவிலும் தடம் பதிக்க துவங்கியுள்ளனர். அந்த வகையில் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த ‛பெல்லி சூப்புலு' உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர் தருண் பாஸ்கர். தவிர சில படங்களில் முக்கிய வேடங்களில் ஒரு நடிகராகவும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது அவர் தமிழில் ஒரு படத்தை இயக்க உள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய தமிழ் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரிக்க இருக்கிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் படத்தின் டைட்டில் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !