உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வெற்றி விழாவில் கண் கலங்கிய பார்வதி

வெற்றி விழாவில் கண் கலங்கிய பார்வதி

நடிகை பார்வதி தமிழ் மற்றும் மலையாளம் மட்டுமல்ல ஹிந்தியில் கூட நடித்து வருகிறார். அதேசமயம் செலக்டிவ் ஆன படங்களில் குறைவாகவே நடித்து வருகிறார். சமீப காலமாகவே மலையாளத்தில் இவர் நடிக்கும் படங்களின் எண்ணிக்கை குறைவு. அதற்கு காரணம் மலையாள திரை உலகில் தனக்கு எழுந்துள்ள மறைமுக எதிர்ப்பு தான் என்று சமீபத்தில் நடைபெற்ற தனது படத்தின் வெற்றி விழாவில் ஓப்பனாகவே கூறி கண்கலங்கியுள்ளார் பார்வதி.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் மலையாளத்தில் நடித்த பிரதம திருஷ்ய குற்றக்கார் திரைப்படம் வெளியானது. இந்த படம் ஓரளவு வரவேற்பு பெற்று கிட்டத்தட்ட 50 கோடி வசூலித்து வெற்றி பட வரிசையில் சேர்ந்தது. இதைக் கொண்டாடும் விதமாக சமீபத்தில் இதன் வெற்றி விழா நிகழ்வு நடைபெற்றது.
இதில் பேசிய பார்வதி, “எனது சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத அந்த கடினமான காலத்தில்தான், பல காரணங்களால் என் மீதான மற்றவர்களின் நம்பிக்கை குறைய தொடங்கியது போல் உணர்ந்த அந்த சூழலில் தான், இயக்குனர் ஷஹாத் என் மீது முழு நம்பிக்கை வைத்து இந்த பட வாய்ப்பை வழங்கினார். என்னுடன் வேலை செய்வது ஒரு இயக்குனருக்கு பெரிய ரிஸ்க் என்பது தெரிந்திருந்தும் அந்த முடிவில் உறுதியாக நின்று எனக்கு ஆதரவளித்ததற்கு இயக்குனருக்கும் தயாரிப்பு குழுவிற்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !