உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / புல்லட் புரூப் கண்ணாடி இல்லாமல் ரசிகர்களை சந்தித்த அமிதாப் பச்சன்

புல்லட் புரூப் கண்ணாடி இல்லாமல் ரசிகர்களை சந்தித்த அமிதாப் பச்சன்


கடந்த சில நாட்களாகவே, குறிப்பாக பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் சுடப்பட்ட சம்பவத்திற்கு பிறகு பல பாலிவுட் பிரபலங்களுக்கு கொலை மிரட்டல் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. அதற்கேற்றபடி அவர்களில் பலருக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. சிலர் பொதுவெளியில் செல்வதையும் ரசிகர்களை சந்திப்பதையும் தவிர்த்து வருகின்றனர்.

அதே சமயம் நடிகர் அமிதாப்பச்சன் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை தனது இல்லத்தின் முன்பு கூடும் தனது ரசிகர்களை சந்தித்து கொஞ்ச நேரம் உரையாடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். கடந்த வாரம் அப்படி ரசிகர்களுடன் உரையாடுவதற்காக வெளியே வந்த அவர் பாதுகாப்பு காரணங்களுக்காக குண்டு துளைக்காத கண்ணாடிக்குள் நின்று அவர்களை சந்தித்து பேசினார். அதே சமயம் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை என்று அதேபோல தன்னை பார்க்க வந்த ரசிகர்களை கேட்டிற்கு வெளியே வந்து சந்தித்தார் அமிதாப் பச்சன்.

ஆனால் இந்த முறை அவர் புல்லட் கண்ணாடி மறைப்பு எதுவும் இன்றி இயல்பாகவே திறந்தவெளியில் ரசிகர்களை சந்தித்து இன்ப அதிர்ச்சி அளித்தார். மேலும் ரசிகர்களுக்கு தனது தீபாவளி வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டார். அதே சமயம் வழக்கம் போல அவரது மகன் அபிஷேக் பச்சன் அவருக்கு அருகில் நின்று சுற்றி இருந்த கூட்டத்தை ரொம்பவே ஆழமாக கண்காணித்து தந்தையின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !