உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கடினமான சூழ்நிலைகளில் உடன் நின்றவர் ; மமிதா பைஜூ குறித்து நெகிழும் அனஸ்வரா ராஜன்

கடினமான சூழ்நிலைகளில் உடன் நின்றவர் ; மமிதா பைஜூ குறித்து நெகிழும் அனஸ்வரா ராஜன்


மலையாளத்தில் சமீப காலமாக முன்னேறி வரும் இளம் நடிகைகள் மமிதா பைஜூ மற்றும் அனஸ்வரா ராஜன். இதில் அனஸ்வரா ராஜன் மமிதாவை விட சினிமாவில் முன்கூட்டியே அறிமுகமானாலும் இருவரும் கிரிஷ் ஏ.டி இயக்கிய 'சூப்பர் சரண்யா' என்கிற படத்தில் இணைந்து நடித்தபோதே மிக நெருங்கிய தோழிகளாக மாறினார்கள். அதன் பிறகு 'பிரணய விலாசம்' என்கிற படத்திலும் இவர்கள் இணைந்து நடித்தனர். அனஸ்வரா ராஜனும் தமிழில் 'வித் லவ்' உள்ளிட்ட வெற்றி படத்தில் நடித்தவர். தற்போது தெலுங்கிலும் சிரஞ்சீவி படம் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறும்போது, “மமிதாவும் நானும் மிகச்சிறந்த தோழிகள். என் வாழ்க்கையில் எனக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்ட கடினமான சூழ்நிலைகளில் மமிதா பைஜூ என் அருகிலேயே இருந்து என் கையைப் பிடித்து எனக்கு மன தைரியமும் உறுதுணையும் அளித்தார். ஒரு நடிகையாக மமிதாவின் திறமையை நான் ரசிப்பதை விட ஒரு நெருங்கிய மனிதராக அவர் காட்டும் உண்மையான அக்கறையும் அன்பும் எனக்கு மிகவும் பிடிக்கும்” என்றும் கூறியுள்ளார் அனஸ்வரா ராஜன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !