உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நானும் விஜய் போல சிஎம் ஆவேனா... : நடிகர் சர்வானந்த் பேச்சு

நானும் விஜய் போல சிஎம் ஆவேனா... : நடிகர் சர்வானந்த் பேச்சு

தமிழில் 'நாளை நமதே, எங்கேயும் எப்போதும, ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, கணம்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தெலுங்கு நடிகரான சர்வானந்த்.

அவர் நடித்துள்ள தெலுங்குப் படமான 'போகி' நாளை வெளியாக உள்ளது. இப்படத்திற்கான இசை வெளியீட்டு நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் ஒன்றை நல்கொண்டா கட்டர் நரசன்னா பாடியுள்ளார். அவர் அரசியல் பிரபலங்களான ரேவந்த் ரெட்டி, ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோரது பிரச்சாரப் பாடல்களைப் பாடியிருக்கிறார்.

நிகழ்ச்சியில் சர்வானந்த் அவரைப் பாராட்டிப் பேசும் போது, “உங்களுடைய பாடல்கள் மூலம் பலரை முதலமைச்சர்களாக்கியிருக்கிறீர்கள். என்னையும் முதலமைச்சராக்குவீர்களா? தற்போது எனது படத்திற்கும் பாடல் பாடியிருக்கிறீர்கள். விஜய்யைப் போல நானும் ஒருநாள் முதலமைச்சராக மாற வாய்ப்பிருக்கிறதா” என்றார்.

அதற்கு பதிலளித்த நரசன்னா, “யாருக்குத் தெரியும், ஒரு நாள் அப்படி நடக்கலாம்,” என்றார்.

தொடர்ந்து பேசிய சர்வானந்த், “திரைப்படங்களில் நடித்து மக்களை மகிழ்விப்பதிலேயே தனக்கு மகிழ்ச்சி,” என்றார்.

இருப்பினும் விஜய்க்காக எந்தப் பாடலையும் பாடாத நரசன்னா பற்றி பேசும் போது தமிழக முதல்வர் விஜய் பற்றி சர்வானந்த் குறிப்பிட்டது விஜய்யும் முன்னாள் நடிகர் என்பதால் அப்படிப் பேசியிருக்கலாம் என்று தெரிகிறது.

நடிகராக இருந்து விஜய் முதல்வராக இருப்பது தென்னிந்திய அளவில் பல நடிகர்களுக்கும் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !