தெலுங்கானா முதல்வரை சந்தித்த மகேஷ் பாபு
ADDED : 15 minutes ago
நடிகர் மகேஷ் பாபு தற்போது ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் 'வாரணாசி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். வரும் ஏப்ரல் மாதம் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார் மகேஷ் பாபு. இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன.
இப்போது 'வாரணாசி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருப்பதை முன்னிட்டு அது குறித்து பேசுவதற்காக மரியாதை நிமித்தமாக மகேஷ் பாபு முதல்வரை சந்தித்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.