சுதீப் நடிக்கும் படத்தின் டைட்டில் 'தாதா ஆன் ஹாலிடே'
கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகரான கிச்சா சுதீப் சமீபத்தில் தனது புதிய படத்தின் டைட்டிலை அறிவிக்கப் போவதாக ஒரு தகவலை வெளியிட்டிருந்தார். அந்த வகையில் தற்போது அவர் நடிக்கும் படத்திற்கு 'தாதா ஆன் ஹாலிடே' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சுதீப்பை வைத்து 'தி வில்லன்' என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் பிரேம் 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்தப் படத்தில் சுதீப் உடன் இணைந்து பணியாற்றுகிறார்.
இந்தப் படத்தின் டைட்டில் டீசரை கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் வெளியிட்டார். சுதீப்பின் வழக்கமான ஆக்ஷன் பாணியிலான படமாக அல்லாமல் குடும்பங்கள் மற்றும் அனைத்து தலைமுறையினரையும் கவரும் வகையில் உணர்ச்சிகரமான பயணத்தை கொண்ட படமாக இது இருக்கும் என்று இயக்குனர் பிரேம் கூறியுள்ளார். இந்தப் படம் மூலம் நடிகர் சுதீப்புக்கு 'கிங் கிச்சா' என்கிற பட்டத்தை வழங்க விரும்புவதாகவும் கூறினார் இயக்குனர் பிரேம்..