மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
1736 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
1736 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
1736 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
1736 days ago
ராதாமோகன் இயக்கிய 'கௌரவம்' படம் மூலமாக தமிழில் அறிமுகமானவர் நடிகர் அல்லு சிரிஷ்.. இவர் தெலுங்கு இளம் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுனின் தம்பி. சமீபத்தில் கிறிஸ்துமஸ் விழா ஒன்றில் கலந்து கொண்ட தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் மற்றும் வருண் தேஜ் இருவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் இருவருக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானது.
இந்தநிலையில் அந்த நிகழ்வில் கலந்துகொண்ட அல்லு சிரிஷும் கொரோனா சோதனை செய்துகொண்டார். ஆனால் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என ரிசல்ட் வந்ததில் தற்போது நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார்.
இதுகுறித்து அல்லு சிரிஷ் கூறும்போது, “ஒன்றுக்கு இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்து கொண்டதில் நெகடிவ் என ரிசல்ட் வந்துள்ளது. திருமண நிகழ்வு, வெளியூர் பயணம், படப்பிடிப்பு என தினசரி வெளியே செல்லும்போது, கொரோனா பாதிப்புக்கு ஆளான ஒரு நபரையாவது நாம் சந்திக்காமல் கடந்துவிட முடியாது. அந்தவகையில் நான் மேற்கொண்டு வரும் ஆயுர்வேதமும் கொஞ்சம் அதிர்ஷ்டமும் தான் என்னை கொரோனா பாதிப்பிலிருந்து காப்பாற்றியுள்ளது என நம்புகிறேன். ஆயுஷ் கவாத், மிருத்யுஞ்ச ரசா என நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஆயுர்வேத பொருட்கள் எல்லாம் இன்னும் காலவாதி ஆகவிடவில்லை. அவையெல்லாம் அவர்கள் நமக்கு கொடுத்த, காலம் கடந்து நிற்கும் பரிசுகள்” என பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார் அல்லு சிரிஷ்..
1736 days ago
1736 days ago
1736 days ago
1736 days ago