மேலும் செய்திகள்
தமிழில் 'ட்ரான்' 3ம் பாகம்: நாளை வெளியாகிறது
1710 days ago
நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை பாலியல் புகார்
1710 days ago
'கருடன்' ரீமேக் தோல்வி ஏன் ? நாயகன் விளக்கம்
1710 days ago
துல்கர் சல்மான் நடிப்பில் தற்போது மலையாளத்தில் உருவாகியுள்ள 'குறூப்' என்கிற படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. எண்பதுகளில் கோழிக்கோட்டை கலக்கிய சுகுமார குறூப் என்கிற கொள்ளையனின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியுள்ளது. ஷோபிதா துலிபாலா நாயகியாக நடித்திருக்கும் இந்த படத்தில் இந்திரஜித் சுகுமாரன், டொவினோ தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். துல்கர் சல்மானை செகண்ட் ஷோ என்கிற படத்தின் மூலம் அறிமுகப்படுத்திய இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் தான் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
துல்கர் நடித்த படங்களிலேயே மிக அதிக பொருள் செலவில், சுமார் 35 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் இது. அதனால் இந்தப்படத்தை மலையாளம் மட்டுமல்லாது அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் என, ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிட இருக்கிறார்களாம். இந்தநிலையில் புத்தாண்டை முன்னிட்டு இந்தப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். வித்தியாசமான ஹேர்ஸ்டைல், எண்பதுகளின் உடைகள் என சுகுமார குறூப்பின் தோற்றத்தில் துல்கர் சல்மான் பார்ப்பதற்கு ஆளே மாறிப் போயுள்ளார்.
1710 days ago
1710 days ago
1710 days ago