நண்பர்கள் குடும்பத்தினரைப் போல... - தனுஷ்
ADDED : 1737 days ago
தனுஷ், பிரபுதேவா கூட்டணி இணைந்து நடித்ததுமில்லை, பிரபுதேவா இயக்கத்தில் தனுஷ் நடித்ததுமில்லை. ஆனால், பிரபுதேவா நடன அமைப்பில், தனுஷ் நடித்த 'ரௌடி பேபி' பாடல் யு டியூபில் மிகப் பெரும் சாதனை படைத்த பாடலாக அமைந்துவிட்டது.
பிரபுதேவா, தனுஷ் இருவருமே தமிழ் சினிமாவின் சில வரைமுறைகளைத் தகர்த்தெறிந்தவர்கள். இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இருவரும் தமிழ் சினிமாவையும் தாண்டி ஹிந்தி சினிமாவிலும் தங்கள் முத்திரைகளை பதித்துள்ளவர்கள்.
ஒரு மொட்டை மாடியில் பிரபுதேவாவுடன் பேசிக் கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ள தனுஷ், “நண்பர்கள் குடும்பத்தினரைப் போல” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரபுதேவா ஹிந்தியிலும் கூட முன்னணி இயக்குனராக இருக்கிறார். தமிழில் விஜய்க்கும் 'போக்கிரி' என்ற சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்தார். பிரபுதேவா இயக்கத்தில் தனுஷ் நடிக்க ஒரு படம் வந்தால் எப்படியிருக்கும் ?.