படப்பிடிப்புக்குத் திரும்பிய ரகுல் ப்ரீத்
ADDED : 1783 days ago
தமிழ், தெலுங்கு, ஹிந்திப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் ரகுல் ப்ரீத் சிங், இரண்டு வாரங்களுக்கு முன்பு கொரானோ தொற்றால் பாதிக்கப்பட்டார். அதையடுத்து ஹைதராபாத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அவருக்கு உதவியாக பெற்றோர்களும் இருந்துள்ளனர்.
இரண்டு வார ஓய்விற்குப் பிறகு பரிசோதனை எடுத்துப் பார்த்ததில் நெகட்டிவ் என வந்த பிறகு படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். ஹிந்தியில் அஜய் தேவகன், அமிதாப்பச்சன் நடிக்க அஜய் தேவகன் இயக்கும் 'மே டே' படப்பிடிப்பில் அவர் பங்கேற்றார்.
அப்படப்பிடிப்பிற்காக மேக்கப் போட்ட புகைப்படத்தைப் பகிர்ந்து தான் மீண்டும் படப்பிடிப்புக்கு வந்துவிட்டதை தெரிவித்துள்ளார்.
தமிழில் 'இந்தியன் 2, அயலான்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ரகுல்.