மேலும் செய்திகள்
‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்!
1707 days ago
ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை!
1707 days ago
த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி!
1707 days ago
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா, ஆல்பட் தியேட்டரில் நடந்தது. அதில் சிம்பு, பாரதிராஜா, படத்தின் நாயகி நிதி அகர்வால் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிதி அகர்வால் மேடையில் பேசினார்.
அப்போது இயக்குனர் சுசீந்திரன், விழாவில் அமர்ந்திருந்த சிம்புவை பார்த்து ஐ லவ் யூ சிம்பு மாமா என்று சொல்லுமாறு நிதி அகர்வாலை தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருந்தார். இதனால் நிதி அகர்வால் தர்மசங்கடத்தில் தவித்தார். என்ற போதும் கடைசி வரை அவர் அப்படி சொல்லவில்லை.
இது விழாவுக்கு வந்த பார்வையாளர்களை முகம் சுழிக்க வைத்தது. இந்த நிகழ்வு குறித்து நிதி அகர்வாலும் மிகுந்த வருத்தமும், கோபமும் அடைந்துள்ளார். அதோடு சமூகவலைதளங்களிலும் சுசீந்திரனின் செயலுக்கு கண்டனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் இதுகுறித்து சுசீந்திரன் விளக்கம் அளித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நிதி அகர்வாலும் அமர்ந்திருக்கிறார். சுசீந்திரன் கூறியிருப்பதாவது: ''ஈஸ்வரன் பாடல் வெளியீட்டு விழாவில் சிம்புவை பார்த்து ஐ லவ் யூ மாமா என்று நிதி அகர்வாலை கூற சொன்னதை பலர் தவறாக நினைத்து விட்டார்கள். படம் முழுக்க அவர் சிம்புவை ஐ லவ் யூ மாமா என்றபடியே சுற்றி சுற்றி வருவார். அதை உணர்த்தும் முகமாக படத்தின் கேரக்டரை மனதில் வைத்தே அவ்வாறு கூறினேன். இதுகுறித்து யாராவது தவறாக நினைத்திருந்தால் அதை மாற்றிக் கொள்ளவும் என தெரிவித்துள்ளார்.
1707 days ago
1707 days ago
1707 days ago