யஷ் உடன் மோதும் சஞ்சய்தத்!
ADDED : 1736 days ago
கே.ஜி.எப்., - 2 படத்தில், 'ஆதீரா' என்ற முக்கிய பாத்திரத்தில், பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் நடித்துள்ளார்.இது குறித்து, அவர் கூறியதாவது:கே.ஜி.எப்., - 2ல், ஆதீரா என்ற பாத்திரத்தில் வில்லனாக நடிக்கிறேன். இதுவரை நான் செய்ததிலேயே, மிகவும் வித்தியாசமான பாத்திரம் இது. கதைப்படி, ஆதீரா அச்சமற்றவன், துணிச்சலானவன், இரக்கமற்றவன். ஒவ்வொரு நாளும், படப்பிடிப்பின் போதும் ஒன்றரை மணி நேரம், 'மேக் அப்' செய்ய வேண்டியிருந்தது.அது தவிர, மனரீதியாக நிறைய பயிற்சிகளை செய்தேன். படத்தில், ஆக் ஷனுக்கு பஞ்சமே இல்லை. நானும், யஷும் மோதும் காட்சிகளை, ரசிகர்கள் கொண்டாடுவர். இயக்குனர் பிரசாந்த் நீல் உடன் பணியாற்றியது, சுமுகமான பயணமாக இருந்தது.இவ்வாறு, அவர் கூறினார்.