உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தேன்மொழி பி.ஏ நிறுத்தமா?

தேன்மொழி பி.ஏ நிறுத்தமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தேன்மொழி பி.ஏ ஊராட்சி தலைவி. இதில் கலக்கபோவது யாரு புகழ் ஜாக்குலின் ஹீரோயினாக நடிக்கிறார். சித்தார்த் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த நிலையில் தற்போது இந்த சீரியல் ஒளிப்பாகாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்வேறு தகவல்கள் ரெக்க கட்டி பறக்கிறது. ஆனால் தற்காலிகமாகத்தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வருகிற 18ந் தேதி முதல் மீண்டும் ஒளிபரப்பாகும் என்று சீரியலில் நடித்து வரும் ஸ்டெபி கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது: எல்லோரும் எனக்கு மெசேஜ் செய்து தேன்மொழி பி.ஏ சீரியல் நிறுத்தப்பட்டு விட்டதா என கேட்கிறார்கள். சீரியல் நிறுத்தப்படவில்லை, ஒரு சில காரணங்களால் ஒளிபரப்பாகாமல் உள்ளது. 18 ஆம் தேதியில் இருந்து மீண்டும் ஒளிபரப்பாகும் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !