பொன்னியின் செல்வன் : ஓடிடி ரிலீஸிற்கு வாய்ப்பு?
ADDED : 1726 days ago
மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு மீண்டும் ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. வைரஸ் தொற்று காலகட்டம் என்பதால், யூனிட் நபர்கள் யாரும் வெளியில் செல்லக்கூடாது. அதேபோல் வெளிநபர்கள் யாருக்கும் உள்ளே அனுமதி கிடையாது என பலத்த செக்யூரிட்டி போட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பொன்னியின் செல்வன் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவது குறித்த பேச்சுவார்த்தை நடக்கிறதாம். 5 மொழிகளில் உருவாகும் படம் என்பதால் பெரிய ஆபர் இப்படத்திற்கு தேடி வந்துள்ளது. ஆனால் மணிரத்னம் இதுகுறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.