உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம்

மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடிப்பில் பொங்கல் விருந்தாக ஜன., 13ல் வெளியான படம் மாஸ்டர். படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தபோதும் படத்தின் வசூல் சிறப்பாக உள்ளது. இந்நிலையில் பொங்கல் வாழ்த்து தெரிவித்து மாஸ்டர் படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கடந்தாண்டு மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடிய வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதில் படத்தில் நடித்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். நடிகர் விஜய் பட்டு வேஷ்டி, வெள்ளை சட்டை அணிந்து பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கேற்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.





தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !