'பாலே' நடன அசைவுகளில் அசத்தும் ஜாக்குலின்
ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் இலங்கையைச் சேர்ந்த ஜாக்குலின் பெர்னாண்டஸ். 35 வயதைக் கடந்த ஜாக்குலின் பல்வேறு ஹிட் ஹிந்திப் படங்களில் நடித்துள்ளார். தற்போது நான்கு ஹிந்திப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இரு தினங்களுக்கு முன்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்த சில புகைப்படங்கள் ரசிகர்களையும், சினிமா பிரபலங்களையும் வெகுவாகக் கவர்ந்துள்ளன.
பாலே நடன அசைவுகளைக் கொண்ட சில புகைப்டங்களை அவர் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படங்கள் 50 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை அள்ளியுள்ளன.
ரசிகர்கள் மட்டுமல்ல, பிரபலங்களும் அந்த அழகான புகைப்படங்களைப் பார்த்து பாராட்டி கமெண்ட்டுகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எத்தனை வயதானலும் உடற்பயிற்சியும், நடனப் பயிற்சியும் செய்தால் உடல் மட்டுமல்ல நம் மனதும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதற்கு இந்தப் படங்கள் ஒரு உதாரணம்.