உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அப்படி நடிக்க மாட்டேன் - கீர்த்தி சுரேஷ்

அப்படி நடிக்க மாட்டேன் - கீர்த்தி சுரேஷ்

கோடு போட்டு நடித்து வரும் பல நடிகைகளும் முன்வரிசை ஹீரோக்களின் பட வாய்ப்புகள் என்கிறபோது பிகினி-, லிப்லாக் என்று கலந்து கட்டி அடிப்பார்கள். ஆனால் கீர்த்தி சுரேஷ் இப்போதுவரை செக்போஸ்ட் தாண்டாத நடிகையாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், மகேஷ்பாபுவுடன் நடிக்கும் ஒரு படத்தில் கீர்த்தி சுரேஷ் பிகினி உடையணிந்து நடிப்பதாக செய்தி வெளியாகி வருகிறது. ஆனால் அந்த செய்தியை மறுத்துள்ள கீர்த்தி சுரேஷ், பிகினி காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்பதை ஒரு கொள்கையாகவே கடைபிடித்து வருகிறேன். அதனால் இதை யாரும் நம்ப வேண்டாம் என்று ஆரம்பத்திலேயே அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !