மாஸ்டர் ஹிந்தி ரீமேக்கிலும் விஜயசேதுபதி?
ADDED : 1721 days ago
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்-விஜய சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா நடிப்பில் பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டி ருக்கிறது. அதோடு, இப்படம் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப் பட உள்ளது.
இந்த நிலையில், மாஸ்டர் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் உரிமையை எண்டெமால் சைன் இந்தியா என்ற நிறுவனம் பெற்றுள்ளது. அதையடுத்து, இப்படத்தில் விஜய் வேடத்தில் நடிக்க ஹிந்தி நடிகர் ஹிருத்திக் ரோசனிடமும், விஜயசேதுபதி நடித்த வில்லன் ரோலில் மீண்டும் அவரையே நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை துவங்கப்பட்டிருப்பதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.
ஆக, மாநகரம் ஹிந்தி ரீமேக்கான மும்பைகாரைத் தொடர்ந்து மாஸ்டர் ஹிந்தி ரீமேக்கிலும் களமிறங்கி பாலிவுட்டை கலக்கப்போகிறார் விஜயசேதுபதி.