எம்ஜிஆருக்கு சிறப்பு செய்த தலைவி படக்குழுவினர்
ADDED : 1721 days ago
எம் ஜி ஆரின் 104 வது பிறந்த நாளையொட்டி “தலைவி” படக்குழுவினர், புரட்சி தலைவி ஜெயலலிதாவின் வாழ்வின் பெரும் தூணாக விளங்கிய, வரலாற்று நாயகனை போற்றும் பொருட்டு, “தலைவி” படத்தின் சிறு துணுக்கை வெளியிட்டு கௌரவுத்துள்ளது.
கங்கனா ரனாவத், அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான “தலைவி” இவ்வாண்டின் மிக முக்கியமான ஒரு திரைப்படமாக விளங்குகிறது.
புரட்சி தலைவர் எம் ஜி ஆரின் 104 பிறந்த நாளை முன்னிட்டு அந்த வரலாற்று நாயகனுக்கு “தலைவி” படக்குழுவினர் சிறப்பு செய்துள்ளனர். தற்போது வெளியிடப்பட்டிருக்கும் வீடியோ எம் ஜி ஆரின் வாழ்வின் மிக முக்கிய தருணங்களை, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் அவர் செய்திருக்கும் பெரும்பங்கினை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது.
படக்குழுவினர் முதல் முறையாக கங்கனா ரனாவத், அரவிந்த் சாமி ஆகிய இருவரும் இணைந்திருக்கும் புகைப்படத்தை, புதிய தோற்றத்துடன் வெளியிட்டுள்ளனர். விஷுவல்கள் எம் ஜி ஆர், ஜெயலலிதா இருவரும் திரையுலகில் சூப்பர்ஸ்டார்களாக, ரசிகர்களின் விருப்ப நாயகர்களாக, கோலோச்சிய காலத்தை மீண்டும் மீளுருவாக்கம் செய்யும் வகையில் அமைந்துள்ளது. கங்கனா ரனாவத், அரவிந்த் சாமி இருவரின் கெமிஸ்ட்ரியும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்குவதாக உள்ளது.
“தலைவி” 3 மொழிகளில் உருவாகும் வாழ்க்கை வரலாற்று திரைப்படம். தமிழ்,தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படத்தினை இயக்குநர் விஜய் இயக்குகிறார்.