மேலும் செய்திகள்
ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு?
1715 days ago
பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி
1715 days ago
இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்?
1715 days ago
நேரம், பிரேமம் என இரண்டு வெற்றிப் படங்களை இயக்கியவர் மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். அதுமட்டுமல்ல, தென்னிந்திய சினிமாவுக்கு நான்கு கதாநாயகிகளையும் அறிமுகப்படுத்திய பெருமைக்கு சொந்தக்காரர். பிரேமம் படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானாலும் கூட, அந்தப்படம் வெளியாகி சுமார் 5 வருடங்கள் எந்தப்படமும் இயக்காமல் இருந்தார் அல்போன்ஸ் புத்ரன். இந்தநிலையில் பஹத் பாசில் ஹீரோவாக நடிக்க, பாட்டு என்கிற படத்தை இயக்கப்போவதாக கடந்த செப்டம்பர் மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்தப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப்படத்தில் தானே இசையமைப்பாளர் ஆகவும் அறிமுகம் ஆகிறார் அல்போன்ஸ் புத்ரன். தற்போது இந்தப்படத்தின் பாடல் ரெக்கார்டிங் பணிகளை துவங்கிவிட்ட அல்போன்ஸ் புத்ரன், பாடல்களை முழுவதுமாக முடித்த பின்னரே படப்பிடிப்புக்கு கிளம்ப திட்டமிட்டுள்ளாராம்
1715 days ago
1715 days ago
1715 days ago