பாகுபலி என்கிற வரலாற்று படத்தை தொடர்ந்து சாஹோ என்கிற கமர்சியல் ஆக்சன் கதையில் நடித்தார் பிரபாஸ். தற்போது ராதே ஷ்யாம் என்கிற படத்தில் நடிக்கிறார். இந்தப்படம் அவரது முந்தைய படங்களில் இருந்து மாறுபட்டு முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகி வருகிறது. ராதா கிருஷ்ணகுமார் என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
சமீபத்தில் சங்கராந்தி பண்டிகையை 'ராதே ஷ்யாம்' படக்குழுவினருடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். பிரபாஸ். அப்போது மொத்த படக்குழுவினருக்கும் விலை உயர்ந்த கைக்கடிகாரங்களை பரிசளித்து அவர்களை மேலும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் பிரபாஸ். இந்த புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.