உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஐஸ்வர்யா ராஜேஷின் கிரீன் சிக்னல்

ஐஸ்வர்யா ராஜேஷின் கிரீன் சிக்னல்

காக்கா முட்டை படத்தில் இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்து பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து கதையின் நாயகியாகவும், வித்தியாசமான படங்களாகவும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கில் நடித்து வருகிறார். நிஜ வாழ்க்கையில் மாடர்ன் பெண்ணான ஐஸ்வர்யா ராஜேஷ், அதுபோன்ற மாடர்ன் வேடங்களில் நடிக்கவே ஆசைப்படுகிறார். ஆனால் அவரை சினிமா உலகமோ பக்கா ஹோம்லியாகவே பார்க்கிறது. இந்த பிம்பத்தை உடைக்கும் விதமாக அவரும் இப்போது மெல்ல கவர்ச்சிக்கு கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார். அதன்காரணமாக சமூகவலைதளங்களில் சற்றே கிளமாரான போட்டோக்களையும் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் குட்டை பாவாடையில் இவர் எடுத்த போட்டோ ஷுட் சமூகவலைதளங்களில் வைரல் ஆனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !