உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கரின் “ருத்ரன்” ஆரம்பம்

ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கரின் “ருத்ரன்” ஆரம்பம்

பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் எஸ்.கதிரேசன், தற்போது ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகும் “ருத்ரன்” படத்தை தயாரித்து, இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை கே.பி.திருமாறன்.

“ருத்ரன்” படத்தின் படப்பிடிப்பு இன்று(ஜன., 21) பூஜையுடன் துவங்கியது. இப்படத்தில் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர் ஆகியோருடன் நாசர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !