விஜய்- 65 : வில்லன் யார்?
ADDED : 1762 days ago
மாஸ்டர் படத்திற்கு பின் விஜய்யின் 65ஆவது படத்தை 'கோலமாவு கோகிலா' புகழ் நெல்சன் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக அருண் விஜய்யும் நடிப்பதாக செய்திகள் வெளியாகின.
ஆனால் தற்போது இந்த படத்தில் அருண் விஜய் வில்லனாக நடிக்கவில்லை. அது வதந்தி என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மற்றுமொரு முன்னணி நடிகரை இப்படத்தில் வில்லனாக நடிக்க பேசி வருகின்றனர்.
அதேசமயம் தளபதி- 65 என்ற டுவிட்டர் பக்கத்தில், 65வது படத்தின் பூஜை பிப்ரவரி முதல் வாரத்தில் நடப்பதோடு, 8-ந்தேதி படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் பிறந்த நாளான ஜூன் 22-ந்தேதி, இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாவதோடு, தீபாவளிக்கு படம் திரைக்கு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.