விமல் ஜோடியாக தன்யா ஹோப்
ADDED : 1720 days ago
கன்னி ராசி படத்தை அடுத்து மஞ்சள் குடை என்ற படத்தில் நடித்து வருகிறார் விமல். இந்த நிலையில், ஜே.கே.ரித்தீஷ் நடித்த நாயகன் மற்றும் பில்லா பாண்டி ஆகிய படங்களை இயக்கிய குட்டிப் புலி சரவண சக்தி இயக்கும் படத்தில் தற்போது நடிக்கிறார்.
தான்யா ஹோப் நாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப் பிடிப்பு நேற்று முதல் தொடங்கியது. எம்.ஐ.கே. புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மதுரையில் நடக்கிறது. இப்படத்தின் டைட்டில் இன்னும் முடிவாகாத நிலையில், விரைவில் பர்ஸ்ட் லுக்குடன் டைட்டீலை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.