ஹிந்தி வெப்சீரிஸில் இணைந்த ராஷி கண்ணா
ADDED : 1720 days ago
தி பேமிலி மேன் என்ற வெப் தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டி.கே ஆகியோர் அதன்பிறகு தி பேமிலி மேன்-2 வெப்சீரியலையும் இயக்கியுள்ளனர். இந்த தொடர் பிப்ரவரி முதல் ஒளிபரப்பாக உள்ளது. இதன் முதல் பாகத்தில் பிரியாமணி முக்கிய வேடத்தில் நடித்த நிலையில், இரண்டாவது பாகத்தில் சமந்தா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் ராஜ், டி.கே ஆகியோர் அடுத்தபடியாக ஒரு வெப்சீரியல் இயக்கும் பணியில் இறங்கியுள்ளனர். இதில் விஜய் சேதுபதி முதன்மை வேடத்தில் நடிக்கிறார். அடுத்த வாரம் முதல் கோவாவில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதே தொடரில் நடிக்கும் பாலிவுட் நடிகர் சாஹித் கபூருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நாயகியாக நடிக்கிறார். இது ராசிகண்ணா நடிக்கும் முதல் வெப் தொடர் ஆகும்.