உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள்

டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள்

ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா நடித்து கடந்த அக்டோபர் 21ம் தேதி திரைக்கு வந்த படம் தம்மா. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் 176 கோடி வசூலித்து இருக்கிறது. ஆதித்யா சர்போத்தார் என்பவர் இயக்கிய இந்த படம் தியேட்டர்களில் ஓடி முடித்து விட்ட நிலையில், வருகிற டிசம்பர் 2ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளார்கள். இதேபோல் தெலுங்கில் ராஷ்மிகா மந்தனா கதையின் நாயகியாக நடித்து கடந்த நவம்பர் 7ம் தேதி திரைக்கு வந்த படம் தி கேர்ள் பிரண்ட். ராகுல் ரவீந்திரன் இயக்கிய இந்த படமும் டிசம்பர் மாதத்தில் ஓடிடிக்கு வருகிறது. இன்னும் சில தினங்களில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !